முல்லை. மாவட்ட தேர்தல் எல்லை நிர்ணய கருத்துக் கணிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாகாண சபை தேர்தலுக்குரிய எல்லை நிர்ணயத்திற்குரிய கருத்துக்கணிப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

முல்லை மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் கா.காந்தீபன் அவர்களின் தலைமையில் இன்று மாவட்ட செயலகத்தில் மாகாண சபை தேர்தலுக்குரிய எல்லை நிர்ணயத்திற்குரிய கருத்துக்கணிப்பு இடம்பெற்றுள்ளது.

பொதுமக்கள் மாகாண சபை உறுப்பினர்கள் கட்சி இணைப்பாளர்கள் ஆகியோர் இக்கருத்துக் கணிப்பிற்கு பங்கேற்றுள்ளனர். இக்கருத்துக் கணிப்பினை ஜனாதிபதினால் நியமிக்கப்பட்ட மாகாண எல்லை நிர்ணயக்குழுவின் தவிசாளர் கே.தவலிங்கம் தலைமையிலான குழுவினர் இவ்விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 05 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளது. புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று, துணுக்காய் ஆகிய 03; பிரதேசங்களிற்கும் 03 உறுப்பினர்கள் தொகுதிவாரியாக் தெரிவு செய்யப்படுவதுடன், ஏனைய 02 உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் கே.தவலிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு