சீரற்ற காலநிலை தொடரும்

வங்காள விரிகுடாக் கடலில் அதிகரித்துள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் சீரற்ற வானிலை நிலவக்கூடுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக வானிலை அவதான நிலையம் சிவப்பு சமிக்ஞையை வெளியிட்டுள்ளதனால், எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் கனமழைப் பொழிவும் கடுங்காற்றும் வீசக்கூடுமென வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் கடுங்காற்று வீசக்கூடும் எனவும் 100 முதல் 150 மில்லிமீட்டர் அளவில் மழைப்பொழிவு இடம்பெறக்கூடும் எனவும், குறிப்பாக தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் அதிக மழைப்பொழிவை எதிர்பார்க்க முடியும் எனவும் வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்களையும், மீனவர்களையும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு