வடக்கில் அரச பஸ் சேவைகள் ஸ்தம்பிதம்

வடக்கு மாகாணத்தில் அரச பேருந்து சேவைகள் அனைத்தும் இன்று ஸதம்பிதமடைந்துள்ளதனால், பொதுமக்கள், மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று காலை ஆரம்பித்தனர். வடபிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிவத்துடுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடன் இடமாற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் எதுவும் சேவையில் ஈடுபடாத நிலையில், அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாதிருக்க பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு