நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பில் தேவையற்ற பயத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லையென இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
சில பொய்ப்பிரசாரங்களை பரப்பி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும், சூறாவளியோ சுனாமி ஏற்படும் வகையில் எதுவித அபாய எச்சரிக்கைகளும் இல்லை என்றும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் அடுத்தகட்ட எதிர்வுகூறல் சம்பந்தமாக தொடர்ச்சியான அவதானத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.