தாழமுக்கம் சூறாவளியாக மாறும் சாத்தியம்

ஏற்கனவே உருவாகியிருந்த தாழமுக்கமானது அடுத்த 12 மணித்தியாலத்தில் சூறாவளியாக உருவாகும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தற்போது காலியிலிருந்து வடமேற்காக 185 கிலோமீற்றர் தூரத்திலும் கொழும்பிலிருந்து 200 கிலோமீற்றர் தூரத்திலும் சூறாவளி நிலைகொண்டுள்ளதாகவும், இது மேற்கு வடமேற்கு திசையில் மணித்தியாலத்திற்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்துகொண்டிருப்பதாகவும் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இன்றைய தினம் நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு