இனந்தெரியாதோரால் இளைஞன் கடத்தல்

யாழ். பல்கலைக்கழகத்துக்கு முன்பாகவுள்ள குமாரசாமி வீதியில் இளைஞர் ஒருவர், இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதி வழியாக 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வேளை, அவரைப் பின்தொடர்ந்து பச்சை நிற முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அடங்கிய சிவில் உடை தரித்தவர்கள், இளைஞனை, மோட்டார் சைக்கிளில் இருந்து தள்ளிவிழுத்தி, பின் புறமாகக் கைவிலங்கிட்டு, முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு