யாழ். பொலிசாரால் கொழும்பில் மூவர் கைது

கோப்பாய், யாழ்ப்பாணம் மற்றும் மானிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கூரிய ஆயுதங்களினால் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் தொடர்பில் மூவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் அடங்கிய குழுவினரால், இவர்கள் கொழும்பு பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதாகவும், வவுனியாவைச் சேர்ந்த 22 வயதான அப்திதீன் மொஹமட் இக்ரம், கோண்டாவிலைச் சேர்ந்த 20 வயதான சிவகுமார் கிதியோன் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயதான ராசேந்திரன் சிந்துஜன் ஆகிய சந்தேகநபர்களே நேற்றைய தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிசார், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு