யாழில் எயிட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி (Photos)

உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு யாழில் மாபெரும் பேரணி இடம்பெற்றது.

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணியானது, கஸ்தூரியார் வீதி வழியாக மீண்டும் யாழ். போதனா வைத்தியசாலையில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தாதியர் பயிற்சிக் கல்லூரியில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வுகளும் இன்று இடம்பெற்றன.

அந்நிகழ்வில் கலந்துகொண்ட யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உரையாற்றுகையில், வைத்தியசாலைகளில் பற்றாக்குறைகள் காணப்படும் நிலையில், தம்மாலான சிறந்த சேவையை வழங்கி வருகின்ற போதிலும், அதையும் தாண்டி தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் சிகிக்சை பலனின்றி சிலர் மரணிக்கக் கூடும் எனவும், மக்கள் அதனை சரியான வகையில் புரிந்து கொள்ளாமல் தவறாக கவனயீன குறைவால் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகத் தெரிவிப்பது தவறு எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் தமது சுகநலத்தில் கவனம் செலுத்த வேண்டும் அதனை விட்டு தமது உடல் நலத்தில் கவனமின்றி பல்வேறு வியாதிகளுடன் வருகின்றவர்களையும் வைத்தியசாலை முகங்கொடுக்க நேரிடுவதனால், பொதுமக்கள் ஒவ்வொருவரும் சுகதேகியாக வாழவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு வாழவேண்டும் என்றும், அவ்வாறே அவர்களுக்கான உரிமைகளை அதிகாரிகள் சுகாதார அதிகாரிகள் வைத்தியர்களென அனைவரும் அவர்களுக்கு வழங்க தவறகூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் உதவிப்பணிப்பாளர் பவானந்தராஜா பால்வினை தொற்று நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் வைத்திய நிபுணர் பிரியந்த பட்டேகெல, வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் தாதிய பயிலுனர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு