வடகொரியா தொடர்பில் சீன – அமெரிக்க ஜனாதிபதிகள் பேச்சு

வடகொரியாவினால் மீண்டும் ஏவுகணை சோதனை செய்யப்பட்டமை தொடர்பில், சீன – அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அதிசக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை வடகொரியா நேற்று சோதனை செய்திருந்தது. இது சுமார் 1000 கிலோமீற்றர்கள் வரையில் பயணித்திருந்ததாகவும், இதன்மூலம் முழு அமெரிக்க கண்டத்தையும் தாக்க முடியும் என்றும் வடகொரியா அறிவித்திருந்தது.

இதுதொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவின் ஜனாதிபதி சி ஜிங் பின்னை தொலைபேசியில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதன்போது, வடகொரியா தமது ஏவுகணை சோதனைகளை நிறுத்தச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ட்ரம்ப், சீன ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு