இலங்கை – தென்கொரியா 05 ஒப்பந்தங்களில் கைச்சாத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நாட்டின் ஜனாதிபதி முன் ஜே இன்னை சோல் நகரில் நேற்றைய தினம் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

தென்கொரியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான உறவுக்கு 40 வருடங்கள் கடந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை ஜனாதிபதியின் தென்கொரிய விஜயமானது இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவை பலமானதாக மாற்றுமென தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன், இன்று ஆரம்பமாகும் இரண்டு நாடுகளுக்கிடையேயான கீர்த்திமிக்க அத்தியாயம் பல்வேறுப்பட்ட நன்மைகளை கொண்டு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை தென்கொரியாவுக்கிடையே ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

பொருளதார ஒத்துழைப்பு, தொழில் அனுமதிப்பத்திர முறைமை, பொருளாதார ஒத்துழைப்பு நிதியத்தின் மூலம் பெற்றுக்கொள்ளக் கூடிய கடன், முதலீட்டு ஒத்துழைப்பு இரண்டு நாடுகளுக்கிடையேயான கலாசார, கலை நடவடிக்கைகள் மற்றும் கல்வி ஆகிய துறைகள் தொடர்பான உடன்படிக்கைகளே கைச்சாத்திடப்பட்டுள்ளன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு