ஹெரோயினுடன் இருவர் கைது – யாழில் சம்பவம்

வியாபார நோக்கத்திற்காக 690 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் திருநகர் பகுதியில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருநகர் பகுதியைச் சேர்ந்த 27, 33 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து உயிர்க் கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் பக்கற்றுக்கள் இரண்டு கைப்பற்றப்பட்டன. 690 கிராம் எடையுள்ள அவற்றின் பெறுமதி 10 இலட்சம் ரூபா என்றும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு