சம்பந்தன் ஐயா நீங்கள் கதைப்பது சரியா?

செய்தி- அரசிடம் வேலை கேட்டால் அப்புறம் உரிமை கேட்க முடியாமற் போய்விடும்.-

சம்பந்தர் அய்யா தனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கேட்டு வாங்க முடியும் தனக்கு இரண்டு சொகுசு பங்களா கேட்டு வாங்க முடியும்

தனக்கு சொகுசு பங்களாவுக்கு பெயிண்ட் அடிக்க 4 கோடி ருபா விசேட பிரேரணை மூலம் பெற்றுக்கொள்ள முடியும்

தனக்கு ஆறு சொகுசு வாகனம் கேட்டு வாங்க முடியும் தனக்கு 30 சிங்கள படையினரை பாதுகாப்பிற்கு கேட்டு வாங்க முடியும்

தனக்கு விசேட செயலர் என்று கூறி தன் மகனுக்கும் சம்பளம் பெற முடியும்

தனக்கு மருத்துவ சிகிச்சை பெற இந்திய அரசின் உதவி பெற முடியும்

தனது காளி கோயில் கட்ட அரசிடம் நிதி பெற முடியும்.

தனது மகனுக்கு மட்டுமல்ல மகளுக்கும்கூட அரச சலுகைகள் பெற முடியும்.

இப்படி தனக்கும் தன்னுடைய சொந்த மக்களுக்கும் சலுகை பெறுவது உரிமை கேட்பதை பாதிக்கவில்லையாம். ஆனால் தமிழ் மக்களுக்கு வேலை கேட்டால் மட்டும் அப்புறம் உரிமை கேட்க முடியாமல் போய்விடுமாம்.

வேலை என்பது சலுகை அல்ல. அதுவும் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டிய ஒரு உரிமையாகும். அந்த உரிமைக்காகவும் குரல் கொடுக்க வேண்டியது சம்பந்தர் அய்யாவின் கடமையாகும்.

அதை மறந்து எப்படி இவரால் இப்படியெல்லாம் பேச முடிகிறது?

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு