மண்சரி அபாயம் – 12 குடும்பங்கள் இடம்பெயர்வு

மண்சரிவு அபாயம் காரணமாக எஹெலியகொட பிரதேச செயலகத்திலுள்ள 12 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, ரத்தினபுரி, வேவெல்வத்த வீதியின் துரேகந்த தமிழ் மகா வித்தியாலத்திற்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அந்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, தேசிய கட்டிட ஆய்வுகள் நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட தள ஆய்வுகளை 90 சதவீதம் நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிறைந்த பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அகற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மண்சரிவு அச்சுறுத்தல் உள்ள பிரதேசங்களைச் சேர்ந்த சமூகநலக் குழுக்கள் மற்றும் முன்னெச்சரிக்கை குழுக்கள் ஊடாக தொடர்ந்து அந்தந்த பிரதேசங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு