10,000 ரூபா வழங்கப்படுகிறது

அசாதாரண காலநிலை காரணமாக அனர்த்தங்களை எதிர்நோக்கிய பொதுமக்களுக்கு 10,000 ரூபா நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படுமென உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நஷ்டஈட்டுத் தொகைகளை பிரதேச செயலாளர் காரியாலயங்களில் சென்று பெற்றுக் கொள்ள முடியுமென அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அடிப்படையில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக முழு நஷ்டஈட்டுத் தொகையில் ஆரம்ப தொகை இன்றையதினம் பிரதேச செயலாளர் காரியாலயம் ஊடாக வழங்கப்படும் எனவும், இதன்பொருட்டு, அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலாளர் காரியாலயங்கள் இன்றும் நாளையும் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் அனர்த்த நிலைமைகள் தொடர்பாக தகவல்கள் கிடைத்திருப்பின் அது தொடர்பாக பிரதேச செயலாளருக்கோ அல்லது உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 1902 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்க வேண்டுமென பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு