சீரற்ற காலநிலை காலநிலை காரணமாக அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதுடன் 05 பேரைக் காணவில்லையென பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த அனர்த்தங்களினால் மேலும் 56 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாகசும் தெரிவிக்கப்படுகின்றது.
மீட்டியாகொட மற்றும் அம்பலன்கொட கடற்கரை பகுதியில் மீனவர்கள் நான்கு பேரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாகவும், மீட்டியாகொட தெல்வத்தை பகுதியை சேர்ந்த 55 மற்றும் 58 வயதுகளைச் சேர்ந்த இருவரின் சடலங்கள் அவைன அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அம்பலன்கொட ஊருவத்தை பகுதியில் வசித்த 39 வயதான ஒருவரும், அங்குறல பகுதியைச் சேர்ந்த 67 வயதான ஒருவரும் சடங்களாக மீடடட்கப்பட்டு, சடலங்கள் பலப்பிட்டிய மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.