சாட்சிக் கூண்டில் ஏற இடமளித்திருக்கமாட்டேன் – மஹிந்த

தாம் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பிரதமர் சாட்சிக் கூண்டில் ஏற இடமளித்திருக்கமாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நேற்ற இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதேஅ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், இந்த மூன்று ஆண்டுகளுக்கு பழிவாங்கல் செயற்பாடே இடம்பெற்று வருவதாகவும், இந்நிலையில், கடந்த கால பிணை முறிகள் தொடர்பில் அடுத்துள்ள இரண்டு ஆண்டுகளில் ஆராய உள்ளதாக கூறுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பதாகவும், தாம் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தால், தமது பிரதமருக்கு இவ்வாறு நேர்ந்திருத்தால், தாம் பிரதமரை அந்த இடத்திற்கு அனுப்ப அனுமதித்திருக்கமாட்டேன் என்றும், பிரதமர் ஒருவர் உலகில் முதல் முறையாக சாட்சிக்கூண்டில் ஏறி, சாட்சியமளிப்பது பொறுத்தமற்ற நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தயவுசெய்து பதவி விலகிச் சென்று சாட்சியமளித்துவிட்டு வருமாறு தாம் கூறுவதாகவும், ஏனெனில் இதனை உலகம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது. நாட்டுக்கு முதலீட்டாளர்கள் வருவதில் சந்தேகத்தை ஏற்படுத்தும் எனவும் முன்னாள் ஜனாதிபமி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு