கேள்விப்பத்திரத் திறப்பு அடுத்த வாரம்

வடக்கு, கிழக்கில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கான கேள்விப்பத்திர திறப்பு அடுத்தவாரம் இடம்பெறவுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டுத் திட்டத்துக்காக சுமார் 40 நிறுவனங்கள் கேள்விப்பத்திரங்களை சமர்ப்பித்துள்ளன. இந்த கேள்விப் பத்திரங்கள் கடந்த மாதம் திறக்கப்பட முடிவு செய்திருந்த போதும், அந்தப் பணிகள் பிற்போடப்பட்டிருந்ததாகவும், இந்நிலையில், குறித்த கேள்விப்பத்திரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு