வடக்குக் கிழக்கில் தனித்துப் போட்டியிட ஏற்பாடு

வடக்கு, கிழக்கில் தனித்தும், அதற்கு வெளியே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பணிகள் தொடர்பான கட்சியின் நடவடிக்கை குறித்து அதன் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கின் சில பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்பாளர் தெரிவு தொடர்பாக கட்சி தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாணத்தில் இன்று கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் நிஸாம் காரியப்பர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு