ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஊழியர்களின் பங்களிப்பு அவசியம்

85 லட்சம் அளவிலான அரச மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்களுள் சுமார் 26 லட்சம் பேர் மாத்திரமே தற்போது ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தொழில் திணைக்களத்திற்குப் புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள 191 தொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கட்டாயமாக பங்களிப்பு வழங்க வேண்டிய மேலும் பத்து இலட்சம் பேர் அளவில் காணப்படுகின்ற நிலையில், அவர்கள் அனைவரையும் பங்களிப்பு வழங்கச் செய்வதற்காக புதியதாக நியமனம் பெற்ற தொழில் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு