தற்போதைய அரசைப் போன்று சிறய அரசாங்கத்தை அறிமுகப்படுத்துவோம்

கூட்டிணைந்த நல்லாட்சி அரசாங்கத்தின் தன்மையைப் போன்று சிறிய அரசாங்கத்தையும் அறிமுகப்படுத்திக் கொடுக்கப் போவதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்சி சார்பில்லாமல் நாடு என்ற ரீதியில் சிறந்த இலக்கை அடைவதே நோக்கமாக இருக்கவேண்டும் என்றும் என்றும், இன்று நல்லாட்சி அரசாங்கமானது கூட்டு அரசாங்கமாகும் என்றும், நடைபெறவிருக்கும் பிரதேசசபைப் தேர்தலின் பின் குட்டி அரசாங்கமும் தம்மோடு இணைவது நல்லதுதானே என்றும் அலுத்கமவில் ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரேயொரு வழி இதுவே என்றும், கட்சி வேறுபாடின்றி அதிகாரத்தை பகிர்ந்தளித்து எதிர்காலத்தை நோக்கிச் செல்வதே நாட்டுக்குச் சிறந்தது என்றும், இந்த நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கட்சி அரசியலை ஓருபக்கத்தில் வைத்துவிட்டு எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாடு என்ற ரீதியில் செயற்பட வேண்டும் என்றும், அது பிரதேச சபை, நகரசபை, மாநகர சபை என்று பிரித்து பார்க்க முடியாதெனத் தெரிவித்துள்ள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இதைவிட்டு அரசியல் செய்யபவர்கள் நாட்டை அழிப்பதற்கு சமன் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு