இரணைமடுவில் புத்தர் சிலை அகற்றப்பட்டது

கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் அருகிலிருந்த சிறிய இராணுவ முகாம் அகற்றப்பட்ட பின்னர் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலையையும் அகற்றப்பட்டுள்ளது.

இரணைமடு குளத்தின் பொறியியளாலர்கள் அலுவலகம் உள்ள கட்டிடத்தை யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினர் தங்களின் தேவைக்காக பயன்படுத்தி வந்த நிலையில், யுத்தம் முடிவுற்ற பின்னர் இரணைமடு குளத்தினை பார்வையிடுவதற்கு பெரும் திரளான சிங்கள மக்கள் வருவதுண்டு. அவர்களின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் புத்தக்கோவிலின் சிலையே தற்போது அகற்றப்பட்டுள்ளது.

குளத்தின் அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 3000 மில்லியன் நிதியுதவியில் புனரமைக்கப்பட்டுவரும் நிலையில், குளத்தின் பொறியியலாளரின் அலுவலக மீள் புனரமைப்பு காரணத்தால் இராணுவம் அங்கிருந்து வேறு ஓர் இடத்திற்கு மாற்றப்பட்ட பின்னரும் புத்த கோவில் குளத்தின் அருகிலேயே இருந்தது.

குளத்தின் அபிவிருத்திக்கு இடையூறு ஏற்படும் என்பதனால் புத்தர் கோவிலிலிருந்த சிலை தற்போது இராணுவத்திரால் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு