காலநிலை குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்து

எதிர்வரும் காலங்களில் நிலவும் காலநிலை குறித்து, ஊடகங்களின் ஊடாக வெளியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

விஷேடமாக மண்சரிவு குறித்த அறிக்கைகளை அவதானித்து, அதில் கூறப்பட்டுள்ளவாறு செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமைக்கு அமைவாக, நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு பூராகவும் அதிக மழையுடனான காலநிலை நிலவலாம் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தெற்கு அந்தமான் கடல் பகுதியிலுள்ள வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஞாயிற்றுக்கிழமை முதல் தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியிலும் நீடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது அடுத்துவரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும், டிசம்பர் 7ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா, வடதமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்பதுடன், மீனவர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் தெற்கு ஆந்திரா, வடதமிழகத்தின் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு