334 இலங்கையர்கள் உயிரிழப்பு

இந்த வருடத்தின் கடந்த 09 மாதங்களில் 334 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான புதிய அறிக்கையினை அமைச்சு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளமைக்கு அமைவாக, உயரிழந்தவர்களுள் 229 ஆண்களும், 105 பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 52 பேர் காணாமல் போய் உயிரிழந்துள்ளதாகவும், 22 பேர் தற்கொலை செய்துள்ளதாகவும், 9 பேர் தாக்குதல்களுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகவும், 247 பேர் சுகயீனமுற்று உயிரிழந்திருப்பதாகவும் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது இறப்பினை உறுதிப்படுத்தி அமைச்சின் இறப்பு உறுதிப்படுத்தும் பிரிவின் மூலம் காப்புறுதியினை வழங்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ள அதேவேளை, விஸா நிறைவடைந்த நிலையில், உயிரிழந்துள்ள ஐவரின் சடலங்களை கொண்டுவந்து நல்லடக்கம் செய்வதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு 13 இலட்ச ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு