சட்டங்களுக்கு உட்பட்டு செயற்படுங்கள்

தேர்தல் சட்டங்களுக்கு உட்பட்டு தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்பாடல் பிரிவு, இளைஞர் மற்றும் மகளிர் சங்கங்கள், லக்வனிதா அமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவற்றுக்கு தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் பணிகளை சட்ட மீறல்களின்றி முன்னெடுக்க அறிவுறுத்தல் விடுக்குமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுடன் முரண்பாடு ஏற்படும் வகையில் செயற்படக் கூடாது எனவும், எவரேனும் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், இதற்கு கட்சியின் சட்டத்தரணிகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு