தனித்தே தேர்தலை எதிர்கொள்வோம் – கருணா அம்மான்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சுயேட்சையாகவே எதிர்கொள்ளவுள்ளதாக கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, சிறுபான்மைக் கட்சிகள் சில போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி இன்னமும் பதிவு செய்யப்படாமையால், இம்முறை தேர்தலைச் சுயேட்சையாகக் களமிறங்கியே சந்திக்கவுள்ளதாகவும், எந்தவொரு பெரும் கட்சிகளுடனும் சேர்ந்து செயற்படும் முடிவை தாங்கள் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இது நாங்கள் சந்திக்கும் கன்னித் தேர்தல். ஆகையால், எமது பலத்தை நிரூபிக்க நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும், மக்கள் நலனுக்காகக் குரல்கொடுக்கும் எங்களை நிச்சயமாக மக்கள் ஆதரிப்பர் என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு