சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம்

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுமென நீதியமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்து சுமார் 19 ஆயிரம் வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களத்தி;ன் பார்வையில் உள்ளதாகவும் அவை குறித்தே விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனவரி முதல் மூன்று நீதிபதிகளைக் கொண்டு மூன்று சிறப்பு நீதிமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளதாகவும், இதன்போது அவற்றில் மிகமுக்கிய வழக்குகள் நடத்தப்படவுள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தலதா அத்துக்கோரல மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு