ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் ஜனநாயகத்திற்கு எதிரானது

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள், ஜனநாயகத்திற்கு எதிரானவையாகுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஆரம்பமான ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், அரசாங்கம் இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்றிட்டங்கள் குறித்து இலங்கை பாராட்டுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2005 – 2015 காலப்பகுதியில் இலங்கையில் 09 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் பல ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கடத்தல் சம்பவங்களும் இந்தக் காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. கடந்த கால ஆட்சியின்போது, ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கும், மௌனிக்கச் செய்வதற்கும், குரூரமான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், சில ஊடகங்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்கள செய்திகள் தெரிவிக்கின்றன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு