ஜெயலலிதாவின் மரணம் குறித்து 60 பேருக்கு சம்மன்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மரணம் குறித்து விசாரித்து வரும் விசாரணை ஆணையம் 60 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. சென்னை எழிலகத்திலுள்ள கலசமஹாலில் இயங்கிவரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், சுமார் 60 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆறுமுகசாமி, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான தகவல்கள் தெரிந்திருக்குமென்று சந்தேகிக்கப்படும் சுமார் 60 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், சம்மன் அனுப்பப்பட்டவர்களில் 27 பேர் நேரில் ஆஜராக அழைக்கப்பட்டுள்ளதாகவும், சம்மன் அனுப்பப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் தற்போது வெளியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு