ஊவா மாகாண சபையில் வரவு செலவுத் திட்டம்

ஊவா மாகாண சபையின் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் நேற்று (04) முன்வைக்கப்பட்டது.

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவினால் குறித்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்திற்காக ஊவா மாகாண சபையின் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 4300 மில்லியன் எனவும் எதிர்பார்க்கப்பட்ட செலவினம் 3855 மில்லியன் ரூபா எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்தினுள் ஆசிரியர் இடமாற்ற கொள்கைக்கு அமைய 5 வருடங்கள் அந்த மாகாணத்திலேயே சேவையாற்ற வேண்டும் என்ற நிபந்தனை 3 வருடங்களாக குறைத்து மாகாணத்திலுள்ள தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழிலை வழங்க முடியுமென முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு