ஒக்கியில் சிக்கிய 18 பேரின் சடலங்கள் மீட்பு

ஒக்கி சூறாவளியில் சிக்கி காணாமல் போன தமிழக கடற்தொழிலாளர்களில் 18 பேரின் சடலங்கள் கேரள கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக கடற்தொழிலாளர்கள் 2,124 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் தமிழக மற்றும் கேரள அரசாங்கங்கள் முனைப்புடன் செயற்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிக்குடாவில் உருவான ஒக்கி சூறாவளி கடந்த 30ஆம் திகதி கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கியது. இதன்மூலம் 967 வீடுகள் சேதமடைந்ததுடன், 3,000ற்கும் அதிகமான மின்கம்பங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் மின்சாரம் விநியோகங்கள் முற்றாக தடைப்பட்டன.

இதேவேளை, ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் இதுவரையில் கரை திரும்பாத நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு