ஆப்கானிஸ்தானில் குண்டுத் தாக்குதல் – அறுவர் பலி

ஆப்கானிஸ்தான் ஜலலாபாத்திலுள்ள கால்பந்து மைதானத்திற்கு வெளியே குண்டுதாரியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் உள்ளடங்குவதுடன், 13 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு சில மணித்தியாலத்திற்கு முன்னர், மைதானத்தில் அரசு ஆதரவு கூட்டம் ஒன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு