சூறாவளி அபாயம் நீங்கியது

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ‘சாகர்’ எனப்படும் காற்றழுத்தத் தாழமுக்கம், நாட்டைவிட்டு முற்றாக விலகிச் சென்றுவிட்டதாக வானிலை அவதான நிலையம் நேற்று அறிவித்தது.

இதனால், இலங்கைக்கு இனி எந்தவொரு பாதிப்பும் இல்லை எனவும், நேற்றுப் பிற்பகல் வரையில், இந்தத் தாழமுக்கம், திருகோணமலையிலிருந்து சுமார் 800 கிலோமீற்றர் வடக்கில் நிலைகொண்டு, வங்காள விரிகுடாவின் வடக்கின் ஊடாக, வடமேல் திசையை நோக்கிப் பயணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

நாட்டின் வடகிழக்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளிலிருந்து சுமார் 300 கிலோமீற்றர் தூரத்திலான கடற்பரப்பில், மணிக்கு 80 மற்றும் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இதனால், அக்கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை முதல் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புப் பிரதேசங்களில், அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு