ஐ.நாவின் கடல் சுத்திகரிப்பு திட்டத்தில் இலங்கையும் இணைந்தது

ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தில் இலங்கையும் இணைந்துள்ளதாக ஐ.ஏ.என்.எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை சேர்க்காதிருக்கும் உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில், இலங்கை, சிலி, ஓமான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் நேற்று அங்கத்துவம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடலில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கூழங்களை சேர்க்காதிருக்கவும், அதிகப்படியான மீள்சுழற்சி வேலைத்திட்டங்கள் குறித்து அவதானம் செலுத்தவும் இலங்கை உறுதியெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு