வீடமைப்பிற்கான கேள்விப் பத்திரங்கள் ஆராயும் பணி

வடக்கு கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை அமைக்கும் செயற்திட்டத்துக்கான கேள்விப் பத்திரங்களை ஆராயும் பணிகள் இடம்பெறுவதாக தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

குறித்த வீடமைப்புத் திட்டத்துக்கான கேள்விப் பத்திரங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பொருத்தமான ஒப்பந்ததாரரை தெரிவுசெய்யும் நோக்கில் தொழில்நுட்பப் பிரிவின் ஊடாக கேள்விப்பத்திரங்கள் ஆராயப்படுவதாகவும், இந்தப் பணிகள் நிறைவடைந்தப் பின்னர், எதிர்வரும் ஜனவரி மாத இறுதிப் பகுதியில் வீடமைப்புத் திட்டப் பணிகளை ஆரம்பிக்க முடியும் வி.சிவஞானசோதி மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு