அரசாங்கத்திலிருந்து வெளியேறும்வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லையென மஹிந்த அணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஏகமனதாக தீர்மானித்துள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அராசாங்கத்தை வீழ்த்துவதற்கான எந்த நடவடிக்கையை மேற்கொள்ளவும் தாம் தயாராகவுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.