ஐ.தே.க – தமிழர் முற்போக்குக் கூட்டணி விரைவில் பேச்சு

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணி தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமென அதன் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் போட்டியிட தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளதனால், பல உள்ளூராட்சி சபைகள் குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளவேண்டி இருப்பதால், பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடிப்பதாகவும், இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுவார்த்தையில் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு