மஹிந்த ஒத்துழைப்பு அவசியமில்லை

மஹிந்த அணியின் ஒத்துழைப்பு இல்லாமல், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், மஹிந்த அணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமையால் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தாம் வெற்றிபெறுவதற்கான சிறந்த வேட்பாளர்கள் உள்ளதாகவும், வரலாறு தொடர்பில் நல்ல நினைவு இருப்பதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கட்சியை விட்டுச் செல்லமாட்டார்கள் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் இளைஞர் அனித் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு