திறன் அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு இடமாற்றம்

திறன் அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.பி.மீகஸ்முல்ல உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் விஷேட கடமைப் பொறுப்புக்கள் அமைச்சுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, விஷேட கடமைப் பொறுப்புக்கள் அமைச்சின் செயலாளரை திறன் அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் செயலாளராக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளதுடன், இது தண்டனை அல்ல, அரசினால் வழங்கப்படும் சாதாரண இடமாற்றமே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, அண்மையில் தந்தங்களையுடைய யானை ஒன்று கொல்லப்பட்ட விவகாரத்தில், வன ஜீவராசிகள் அமைச்சுக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு