ஒலுவில் கடலில் ஒருவர் மாயம்

அம்பாறை, ஒலுவில் கடலில் மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பிய படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இன்று (07) அதிகாலை ஒலுவில் வெளிச்ச வீட்டுப் பிரதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று கரையை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கையில் குறித்த படகு கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒலுவில், 6ஆம் பிரிவைச் சேர்ந்த அபுசாலி முகம்மது இப்ராகிம் (33) என்ற மீனவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளாரென அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காணாமற்போன மீனவரைத் தேடும் பணியில் பொலிஸாரும் மீனவர்களும் ஈடுபட்டுள்ளனர். இவருடன் குறித்த படகில் சென்றிருந்த ஏனையோர் கரை திரும்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு