வளிமண்டலவியல் திணைக்களத்தில் தமிழுக்கு புறக்கணிப்பா?

காலநிலை சீர்கேடுகளால் ஏற்படும் கடும் காற்று, மழை காரணமாக அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டுவரும் நிலையில் இவை தொடர்பிலான முன்னறிவித்தல்கள் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளிலேயே வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுவரும் நிலையில், தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவது ஏன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடமே குறித்த கேள்வியை எழுப்பியுள்ளதுடன், வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைமையே காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் – இலங்கை என்ற தமிழ் மொழியிலான தலைப்பே எழுத்துப் பிழைகளுடன் காணப்படுவதுடன் தொடர் பயன்பாடின்றியும் முன்னறிவித்தல்களின்றியும் உள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தில் இத்தகைய நிலைமை ஏற்பட தமிழ் தெரிந்த அதிகாரிகள் இன்மையே காரணமெனக் கூறப்படுகின்றது. அதாவது, திணைக்களத்திற்கு குறைந்தபட்சம் தமிழ் தெரிந்த அதிகாரிகள் 04 பேராவது இருக்க வேண்டிய நிலையில் குறிப்பிட்ட கடமைக்காக ஒருவருமே இல்லை என்றே தெரிய வருகின்றது.

இத்தகைய நிலையினை மாற்றும் வகையில் வளிமண்டளவியல் திணைக்களத்திற்கு போதிய தமிழ் அதிகாரிகளை நியிமிப்பதற்கும் தமிழ் மொழி மூலமாக காலநிலை மாற்றங்கள் தொடர்பில் உடனுக்குடன் முன்னறிவித்தல்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேற்படித் திணைக்களத்தின் தமிழ்மொழி மூலமான இணையத்தளத்தினை முறையாக செயற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியுமா என அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு