சாதாரண தரப் பரீட்சையின் கட்டாய பாடங்கள் அதிகரிப்பு?

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் கட்டாயப் பாடங்களின் எண்ணிக்கையை 06 ஆக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வியில் தரமான மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக தேசிய பாதுகாப்பு மாணவர் காப்புறுதி தினத்தை முன்னிட்டு நுகேகொட அநுல வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அடுத்த ஆண்டு ஆரம்ப பகுதியில் சாதாரண தரத்தில் இருந்து உயர் தரத்திற்கு தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கு டெப் வழங்கப்படும் என்றும், 2019ம் ஆண்டாகும் போது எந்தவொரு மாணவர்களும் சாதாரண தர பரீட்சைக்குப் பின்னர் நின்று விடாமல் அனைத்து மாணவர்களும் உயர் தரத்திற்கு செல்லும் நிலை உருவாக்கப்படும் என்றும் கல்வியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு