தொடர்கிறது வேலைநிறுத்தம் – ஜனாதிபதி, பிரதமர் உறுதிமொழி வழங்க வேண்டும்

புகையிரத தொழிற்சங்கங்கள் சில ஆரம்பித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் புகையிரத சாரதிகள் ஆரம்பித்த வேலை நிறுத்த போராட்டத்துடன், நேற்று நள்ளிரவு முதல் புகையிரத காப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட மேலும் சில குழுக்களும் இணைந்து கொண்டுள்ளதாகவும், இது தொடர்பாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாகவும் லோகோமோடிவ் செயற்பாட்டு பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி அல்லது பிரதமர் உறுதிமொழி ஒன்றை வழங்கும் வரையில் வேலை நிறுத்தத்தை தொடரப் போவாக புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு