உள்ளூராட்சித் தேர்தலைப் பகிஷ்கரிக்கத் தீர்மானம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்காக எந்த அரசியல்வாதிகளும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய தாம் வருகின்ற உள்ளுராட்சி தேர்தலை பகிஷ்கரிக்கப் போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று 292ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவித்து போது கனகரஞ்சினி மற்றும் லீலாதேவி இதனைத் தெரிவித்துள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களின் ஒவ்வொரு தேர்தல் விஞ்ஞாபனத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தை முகவுரையாக எழுதி வாக்குகளை பெற்று தங்களின் சுயநல அரசியலை நடத்துகின்றார்களே தவிர காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.

எனவே எதிர்வரும் தேர்தலிலும் எங்களுடைய விடயத்தை முன்வைத்து வாக்கு கேட்டு வருகின்றவர்களுக்கு தாங்கள் தக்க பாடம் புகட்டவுள்ளோம், அந்த வகையில் இந்த உள்ளுராட்சி தேர்தலில் நாம் எவருக்கும் வாக்களிக்கப் போவதில்லை எனவும், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளென இனி எவரும் தங்களை தாங்களே கூறிக்கொள்ளக் கூடாது. அதனை மக்கள்தான் கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினைகளில் அக்கறையில்லாதவர்கள் ஏகபிரதிநிதிகள் அல்ல எனவும், எதிர்வரும் பத்தாம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் யாழ்ப்பாணத்தில் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தி ஐ.நா அலுவலகத்தில் மகஜர் ஒன்றையும் வழங்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு