சில வருடங்களுக்கு முன்னர், சர்வதேச ரீதியில் பாரிய கேள்வி நிலவிய இலங்கையில் தேயிலைத் தொழிற்துறை தற்போது பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளமைக்கு அதிகாரிகளே பொறுப்புக்கூற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேயிலைக் கைத்தொழில் 150 வருடங்களை எட்டியுள்ள நிலையில், அதன் பிரதான நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்ற போது இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதுடன், நாட்டைப் பற்றி சிந்திக்காத அதிகாரிகள், தங்களது தனிப்பட்ட இலாபம் பற்றி மாத்திரமே சிந்தித்ததாலேயே, இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.