எமது வெற்றி மக்களின் வெற்றியே – வேட்புமனுத் தாக்கலின் போது டக்ளஸ் தேவானந்தா

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சாவகச்சேரி நகர சபைக்குப் போட்டியிடுவதற்கான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பு மனுவை கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்று தாக்கல் செய்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் உதவித் தேர்தல் ஆணையாளர் அகிலனிடம் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, தாம் வெற்றி பெறுவது என்பது மக்களின் வெற்றி. இந்தத் தேர்தலில் கிடைக்கும் வெற்றி மக்கள் எதிர்கொள்கின்ற அன்றாட பிரச்சினைக்கு தீர்வாகவும் அபிவிருத்தி மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் அமையும் என்று தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அனைத்து சபைகளிலும் போட்டியிடத் தயாராகவுள்ளதுடன், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களில் இரண்டு மூன்று தினங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில், ஆலையடிவேம்பு பிரதேச சபைகளிலும், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் தமது கட்சி போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இம்முறை இடம்பெற்றவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஈ.பி.டி.பி கட்சி தனது வீணைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு