மருத்துவ கற்கைகளுக்கு புதிய சட்டமூலம் தயாரிப்பு

மருத்துவ கற்கைகளுக்கு ஆகக் குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது.

இத்தரத்தினை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்துவ சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் ஆகிய தரப்புகளுக்கு இடையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாகவும், குறித்த கற்கை நெறிகளுக்காக பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக் கொள்ளப்படுகின்ற மாணவர்கள் இந்த நாட்டின் க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் மற்றும் பௌதீகவியல் ஆகிய பாடவிதானங்களில் ஆகக் குறைந்தது உயர் (சி) சித்திகள் இரண்டினையும் சாதாரண (எஸ்) ஒன்றினையும் ஒரே தடவையில் பெற்றிருக்க வேண்டும் என்பதே ஆகக் குறைந்த தகைமைகளென அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கை மருத்துவ கல்விக்கான ஆகக்குறைந்த தரத்தினை வைத்திய கட்டளைகள் சட்டத்தின் கீழ் அமைகின்ற ஒழுங்கு விதிகளாக அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவது தொடர்பில் சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு