முல்லைத்தீவில் சட்டவிரோத மண் அகழ்வு – ஒருவர் கைது

முல்லைத்தீவு நகரின் ஊடாக சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திர சாரதி ஒருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவருக்கு, அனுமதிப் பத்திரமின்றி மண் ஏற்றிச் சென்றமைக்காக 50000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், பிணையில் செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணைகள் 28ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு