இனியும் வாக்களிக்கத் தயாரில்லை

ஒவ்வொருவரையும் நம்பி வாக்களித்து ஏமாந்துவிட்டோம். இனியும் நாம் வாக்களிக்க கூடிய நிலையில் இல்லையென முல்லைத்தீவில் 280ஆவது நாளாக போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், இன்று தெரிவித்துள்ளனர்

இது தொடர்பில் தாயொருவர் கருத்துத் தெரிவிக்கையில், மீள்குடியேற்றம் வந்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்தார். நாங்கள் எங்களுடைய பிள்ளைகள் எங்களுக்கு கிடைக்குமென்ற நம்பிக்கையோடும் எங்களுக்கு ஒரு விடுதலை கிடைக்கும் என்ற ஒரு ஆவலுடனும் வாக்களித்த போதிலும், எங்களுக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, மைத்திரி ஜனாதிபதியாக வந்தார். அவரையும் நாங்கள் எதிர்பார்த்தோம். அவரும் அதையே செய்தார். திரும்பவும் இப்போது எங்களிடம் வந்து வாக்கு கேட்கின்றனர். ஆனால் நாங்கள் வாக்களிக்க கூடிய நிலையில் இல்லையெனத் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு