கின்னஸ் சாதனை படைத்தது இலங்கையின் நத்தார் மரம்

இலங்கையில் கடந்த வருடம் 72.1 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்ட நத்தார் மரமானது கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது.

அமைச்சர் அர்ஜுண ரணதுங்க துறைமுகங்கள் அமைச்சராக பதவி வகித்த போது இவரது தலைமையின் கீழ் கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கபட்ட நத்தார் மரம் உலகிலேயே உயரமான நத்தார் மரமாக கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.

இது குறித்த சான்றிதழ் உலக கின்னஸ் சாதனைக் குழுவினரால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று (13) கையளிக்கப்படவுள்ளது.

உலகின் மிக உயரமான நத்தார் மரமாக கடந்த 2015ஆம் ஆண்டு சீனாவில் அமைக்கப்பட்ட 55 மீற்றர் உயரமான நத்தார் மரம் சாதனைப் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு