தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் விழுந்திருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள், இன்று அதனை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் நேற்று (12) பணப்பை ஒன்று வீழ்ந்திருந்துள்ளது. இதனை அவதானித்த பொலிஸ் கான்ஸ்டபிளான எஸ். இருதயராஜா அதனை பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்திருந்தார். பணத்துடன் பணப்பையை தொலைத்த நபர், முறைப்பாடு பதிவு செய்வதற்காக, இன்று (13) தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்துக்கு வந்திருந்தபோது, பணப்பை கையளிக்கப்பட்டது.
பணத்தைப் பறிக்கும் பல்வேறு கும்பல்கள் மத்தியில், வீதியில் கிடந்த பணத்தை எடுத்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த பொலிஸ் கான்ஸ்டபிள் இருதயராஜாவை பொலிஸ் உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.